தொகுப்பாளர் விஜே மகேஷ்வரி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். மேலும் அசத்தப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தாயுமானவன், புது கவிதை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் மந்திர புன்னகை, சென்னை 28 பார்ட் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக அவரது மகனுடன் பகிரும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் விஜே மகேஸ்வரி தனது மகனுடன் Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். விஜேவின் நிக்கியின் கேள்விகளுக்கு இருவரும் ஜாலியாக பதிலளித்தனர். அப்போது அம்மாவிடம் பிடிக்காத விஷயம் எது என அவரிடம் கேட்ட போது, அம்மா எப்பவுமே வெளியே போவாங்க, அதுவும் குவாரண்டின் டைம்ல'' என்று போட்டுக்கொடுக்க, அதற்கு மகேஷ்வரி ''நான் வெளியே போனா தான வேல நடக்கும்'' என்றார்.