சின்னத்திரைகளில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே அர்ச்சனா.
Also Read | "ரொம்ப வேகமா வளர்ந்துட்டான்".. தனது மகனின் Unseen வீடியோவை பகிர்ந்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ச்சனா, சன் டி.வி, ஜீ தமிழ், விஜய் டிவி என முன்னணி தமிழ் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் இன்னும் பெருவாரியான மக்களிடையே பிரபலமானார்.
நடிகை அர்ச்சனா, சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அர்ச்சனாவின் மகள் சாராவும் அவருக்கு மகளாகவே டாக்டர் படத்தில் நடித்திருந்தார்.
அர்ச்சனாவின் தங்கையும் பிரபல யூடியூப் பிரபலமான அனிதா சந்தோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "உங்கள் பையன் கொஞ்சம் கருப்பா இருக்கான். அவங்க அப்பா போல.. உன் கலர்ல இருக்கனும்ல?.. ஏன் ஒல்லியா இருக்கான்? என கேள்வி கேட்பவர்களுக்கு எனது பதில், "குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருப்பதே சரியானது. தயவு செய்து அவர்கள் தோற்றம் மற்றும் அவர்கள் இருக்கும் விதத்தை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். நீங்கள் நிச்சயமாக பெற்றோரை காயப்படுத்துகிறீர்கள் (நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட). எந்த தாயும்/தந்தையும் தங்கள் குழந்தைகளைப் பற்றி எதிர்மறையாகவோ அல்லது கெட்டவையாகவோ எதையும் கேட்க விரும்ப மாட்டார்கள்.
நாம் அவசர அவசரமாக சில விஷயங்களைச் சொல்கிறோம், ஆனால் அது பெற்றோருக்கு ஒரு பெரிய நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்பாக இருங்கள்" என அனிதா பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் பின்னூட்டம் செய்துள்ள அர்ச்சனா, "எவடி அவ என் புள்ளைய பத்தி அப்படி பேசுறவ? பின்னிடுவேன்னு சொல்லி வை!!" என கமெண்ட் செய்துள்ளார்.
Also Read | துணிவு, வாரிசு எந்த படம் முதல்ல பார்ப்பீங்க?.. காரணத்தோடு சட்டுன்னு பதில் சொன்ன G.P. முத்து!