Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

VJ அஞ்சனாவிடம் ஆன்லைனில் புரொபோஸ் செய்த நபர்... அவங்க கணவர் என்ன சொல்லிருக்காரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் மியூசிக்கில் 10 வருடங்களுக்கும் மேல் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே அஞ்சனா. இவருக்கு அறிமுகம் என்பது தேவை இல்லை. ஏனென்றால் சன் மியூசிக் என்று சொன்னாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வருபவர்கள் அஞ்சனா மற்றும் மணிமேகலை தான். இந்நிலையில் நீண்ட வருடங்கள் சன் மியூசிக்கில் பணியாற்றிய அவர் பிரபு சால்மன் இயக்கத்தில் 'கயல்' படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரனை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Vj anjana funny answer to a netizen அஞ்சனாவிடம் புரொபோஸ் செய்த நபர்

இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்  இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் லைவில் பேசியுள்ளார் அஞ்சனா. அப்பொழுது நெட்டிசன் ஒருவர் "ஐ லவ் யூ என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறீர்களா?" என்பதுபோல கேட்டுள்ளார். இதனை பார்த்த அஞ்சனா சற்றே அதிர்ச்சியாகி விட்டார். எனினும் வேடிக்கையாக இதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இதை என் கணவரிடம் கூறினேன். அவர் அட்ரஸை மட்டும் கண்டு பிடித்து கொடு,  உன்னை கொரியர் செய்து விடுகிறேன் என்று கூறுகிறார். அப்பன்னா பாருங்க, எவ்ளோ கஷ்டப்பட்றானு. இதெல்லாம் தேவையா பாலாஜி" என்பது போல வேடிக்கையாக இதற்கு பதில் அளித்துள்ளார்.

Tags : Anjana

மற்ற செய்திகள்

Vj anjana funny answer to a netizen அஞ்சனாவிடம் புரொபோஸ் செய்த நபர்

People looking for online information on Anjana will find this news story useful.