நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவு திரைத் துறைக்கு மட்டும் அல்ல, இந்த தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பு என பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு வயது 59. சென்னை வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சைகள், எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடலுக்கு திரைத்துரையினரும் ரசிகர்களும் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் பதிவினையும் பதிவிட்டிருந்தார். அத்துடன் விவேக்கின் உடல் அரசு முறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த எந்திரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விவேக் வடிவேலுவுடன் வாடா போடா என உரிமையோட பேச, வடிவேலுவும் நண்பா டேய்.. என உரிமையோடு பேசி அந்த மேடையை அந்த இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்களும் களைகட்ட வைத்த பழைய வீடியொ இணையத்தில் வைரலாகி வருகிறது. எந்திரன் இசை விழாவை விவேக் தொகுத்து வழங்கியிருந்தபோது அவ்வாறு பேசிக்கொண்டனர். அப்போது என்னடா இவ்வளவு தூரத்துல நிக்கிறோம் என வடிவேலு கேட்டதற்கு, என்னடா பண்றது பெரிய ஸ்டேஜாக போட்டுவிட்டனர் என விவேக் பதில் அளித்தார். அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் வடிவேலுவும் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில் விவேக் நடித்திருந்ததை அடுத்து, விவேக் தம் படத்தில் நடித்திருந்தது பற்றி விவேக் சொன்னதையும், விவேக் தன் படங்களில் நடித்தது குறித்த தன் கருத்தையும் மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் ஷங்கர் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
ALSO READ: ஜென்டில்மேன் படத்தில் அந்த வசனத்தை நினைவுகூர்ந்த ஷங்கர்! 'விவேக்' மறைவுக்கு அஞ்சலி!