நடிகர் அஜித்குமார் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நிதியுதவி அளித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரபலங்கள் தொடங்கி பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவரது சார்பில் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். பிரதமரின் PM Cares Fund-ற்கு 50 லட்சமும், முதலமைச்சரின் CM Cares Fund-ற்கு 50 லட்சமும் அவர் நிதியுதவி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படத்திறையை சார்ந்த ஃபெஃப்சி தொழிலாளர் அமைப்பிற்கு அவர் 25 லட்சம் அளித்துள்ளதாகவும் நமது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்டோர் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களை மருத்துவமனையாக பயன்படுத்தி கொள்ளலாம் என தங்களால் முடிந்த உதவியை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.