'குறும்பு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அதனைத் தொடர்ந்து 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பில்லா' படத்தை தல அஜித்தை வைத்து மிக ஸ்டைலிஷ்-ஆக ரீமேக் செய்திருந்தார். அதன் மூலம் தல ரசிகர்களின் மனதில் விஷ்ணுவர்தனுக்கென ஒரு தனி இடம் உண்டு. அதனைத் தொடர்ந்து 'ஆரம்பம்' படத்தில் பக்கா மாஸ் மற்றும் கிளாஸ் அஜித்தை ஒரு படத்தில் காண்பித்தார்.
கடைசியாக ஆர்யா - கிருஷ்ணா நடிப்பில் 'யட்சன்' என்கிற படத்தை இயக்கியவர் தற்போது ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க விருப்பதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக கரண் ஜோகர் 'ஷெர்ஷா' என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை அறிவித்தார். இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
பில்லா படத்தில் 'சரித்திரத்தை ஒரு தடவை திரும்பி பாருங்க' என்ற வசனம் வரும். அதே போல நம்மை சரித்திரத்தை திரும்பி பார்க்க கார்கில் போர் குறித்த கதையை அவர் இயக்கவுள்ளாராம். இந்த படம் கார்கில் போரில் கலந்துகொண்ட இந்திய ராணுவ அதிகராரி விக்ரம் பத்ரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்பைடையாகக் கொண்டு உருவாவதாக கூறப்படுகிறது.