தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
Also Read | Pushpa : ரஷ்ய மொழியில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா பாகம் -1’.. வெளியான டிரெய்லர்..
விஷ்ணு விஷால் நடிப்பில் இதற்கு முன்பாக 'எஃப்ஐஆர்' படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது விஷ்ணு விஷால் மற்றும் 'பொன்னியின் செல்வன் பூங்குழலி' ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படம், டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. செல்லா அய்யாவு இயக்கி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம், குஸ்தி சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பட விழாவில் பேசிய ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், “ஒரு சிறிய நிகழ்வு என்று தான் விஷ்ணு விஷால் கூறினார். நானும் விஷ்ணுவும் ஒரே நேரத்தில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினோம். அவரது வெண்ணிலா கபடி குழு திரைப்படம் 2009 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நான் 2008 ஆம் ஆண்டு தயாரிப்புக்குள் அடியெடுத்து வைத்தேன். நடிப்பில் என்னை விட விஷ்ணு விஷால் சீனியர். நான் அப்போது நீர்ப்பறவை என்கிற திரைப்படத்தை தயாரித்தேன். சீனு சார் இயக்கினார். அப்போது ஷூட்டிங் பார்ப்பதற்கு போவேன்.
இப்போது இன்னும் நிறைய திரைப்படங்களை பண்ணுகிறோம். லவ் டுடே அண்மையில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதற்கு இந்த நேரத்தில் அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். பொதுவாக படத்தை நாங்கள் வாங்கி விடுவோம். ஆனால் படத்தை எப்போது காட்டப் போகிறீர்கள் என்றால் ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் படத்தை காட்டுவார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு படத்தின் மீது இருக்கும் நம்பிக்கை. எனக்கு தைரியமாக விஷ்ணு விஷால் படத்தை காட்டினார். படம் பார்த்தவுடனே தயாரிப்பாளரிடம் கூறிவிட்டேன்.
முதல் பாதி மிகவும் நகைச்சுவையாகவும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் இருப்பதாக கூறினேன். நிச்சயமாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று கூறினேன். விஷ்ணு மற்றும் இயக்குநர் செல்லா இருவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்து விஷ்ணுவும் செல்லவும் தினமும் வீட்டில் தர்ம அடி வாங்குவார்கள் போலிருக்கிறது. அதை மிகவும் ரசித்து உணர்ந்து ஒரு காட்சியை எடுத்து இருக்கிறார்கள். படத்தில் ஒரு காட்சி இருக்கிறது.. ஹீரோயின் ஒரு திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி சில பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த படத்தில் விஷ்ணுவின் தாய் மாமனாக கருணாஸ் நடித்திருப்பார். இதில் குறிப்பிட்ட இந்த காட்சி கணவன் மனைவியாக இருப்பவர்களுக்கு கனெக்ட் பண்ணக்கூடிய காட்சியாக இருக்கும்.” என்று கூறிக் கொண்டிருந்தவர் திடீரென யோசித்து, “நான் பேச ஆரம்பித்தால் பிரச்சினையாகிவிடும். ஏனென்றால் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டு சிரித்தவர் படத்தின் கதை பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டு, பட குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், “இந்த படத்தை விஷ்ணு விஷாலேதான் என்னை ரிலீஸ் பண்ண சொன்னார். என்னால் என் படத்தையே ரிலீஸ் பண்ண நேரமில்லை என்று கூறிய போது தன்னுடைய திரை பயணத்தில் ரெட் ஜெயண்ட்டுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்று கூறினார். விஷ்ணு விஷால் நீயே அதை சொல்லிவிடு. ஏனென்றால் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. நான்தான் போய் எல்லா படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுவதாக.. இதுதான் உண்மை.. இந்த திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகிறது. FIR இந்த வருடத்தின் முதல் ஹிட் திரைப்படம். அந்த படம் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்தப் படத்தை ரெட் ஜெயண்ட்க்கு கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு நன்றி. இப்படம் வெற்றிபெறும்” என்று குறிப்பிட்டார்.
Also Read | அதென்ன ‘போக பிஸ்ஸா’..? ட்ரெண்ட் ஆன ஏலியன்கள் Vs பழங்குடி Task.. இதான் ரூல்ஸ்? bigg boss 6 tamil