சென்னை: விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த FIR படத்தின் சேட்டிலைட்உரிமத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், “எஃப் ஐ ஆர் (FIR)” படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிட்டது.பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆக்ஷன் கலந்த த்ரில்லராக இருக்கும் இப்படம் , இர்ஃபான் (விஷ்ணு விஷால்) ஒரு சாதாரண வாழ்க்கையைக் கொண்ட ஒரு அப்பாவி இஸ்லாமிய மனிதர், தீவிரவாதம் என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளால் சிறையில் அடைக்கப்பட்ட பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் அவரது பயணம்தான் படத்தின் கதை.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் அஷ்வத் இசையமைத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 240 நாடுகளில் மார்ச் 12 முதல் FIR அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் FIR படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவில் இந்த படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.