www.garudavega.com

"நொடிப்பொழுதில் உயிர் தப்பினேன்.. கடவுளுக்கு நன்றி".. ஷூட்டிங் விபத்து குறித்து விஷால்! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால்.

Vishal Tweet about Mark Anthony Movie Shooting Spot Accident

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஷால் & SJ சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த திடீர் விபத்து.. வீடியோ

பின்னர் இவர், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.

புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கிய லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தனர்.

Vishal Tweet about Mark Anthony Movie Shooting Spot Accident

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடிகர்கள் நோக்கி வந்து விபத்துக்குள்ளானது.

Vishal Tweet about Mark Anthony Movie Shooting Spot Accident

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் விஷால், தமது டிவிட்டர் பக்கத்தில், "சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் என் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. இந்த சம்பவத்தால் என் கால்கள் படப்பிடிப்பில் மரத்து போய்விட்டன." என விபத்து குறித்து விஷால் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | ரஜினிகாந்த் நடிப்பில் காந்தாரா - 2 படம்?.. இயக்குனர் ரிஷப் ஷெட்டி அளித்த வைரல் பதில்! TRENDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Tweet about Mark Anthony Movie Shooting Spot Accident

People looking for online information on Mark Anthony Movie Shooting Spot Accident, Mark Antony, Vishal, Vishal Tweet will find this news story useful.