தமிழ் சினிமாவில் முக்கிய ஆக்ஷன் நடிகர்களில் ஒருவரான விஷால் கடைசியாக ‘சக்ரா’ திரைப்படத்தில் காணப்பட்டார்.
புதுமுகம் ஆனந்தன் இயக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ ஷங்கர், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் 30வது படமும் தயாராகிறது.‘எனிமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக இடம் பெறுகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.
இதனிடையே விஷால் 31 எனும் புதிய படத்தை து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹெய்தி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் தான், ஹைதராபாத் ஷூட்டிங் செட்களில் விஷால் சண்டை போடும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் விஷால் சண்டைக்காட்சியின் போது முதுகில் அடிபட்டு, அவர் காயமடைவதைக் காணலாம்.
#Vishal got severe back injury at #Vishal31 shooting spot ,Hyderabad. While performing climax stunt sequence his back got injured severely like last time. Varma therapist who took care of the treatment already fixed it this time too. pic.twitter.com/J96FYY8dRi
— Johnson PRO (@johnsoncinepro) July 20, 2021
விஷால்31 படத்தின் க்ளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சியை நிகழ்த்தும்போது இந்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் விஷாலுக்கு பிசியோதெராபி அளிக்கப்பட்டு மீண்டும் இயல்பாக ஷூட்டிங்கை தொடங்குவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.