www.garudavega.com

முதல் தடவை 7 வயது பையனுக்கு அப்பாவாக விஷால் & அம்மாவாக சுனைனா.. BTS புகைப்படங்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் நடிப்பில் கடைசியாக வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியானது. எது தேவையோ அதுவே தர்மம் என்கிற குறும்படத்தின் மூலம் பிரபலமான து.பா. சரவணன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Vishal and Sunaina doing parents role in Laththi

Also Read | பொன்னியின் செல்வன் போர்க் காட்சிகள்.. இந்த ஊர்ல தான் எடுத்தாங்களாம்! மணிரத்னம் சொன்ன தகவல்!

இதனைத் தொடர்ந்து ராணா புரொடக்‌ஷன்ஸ்  சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் "லத்தி".  புது இயக்குநர் வினோத்குமார் இயக்கி வருகிறார் .

சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த பிரமாண்ட படபிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இறுதி கட்டமாக நடந்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் இதன் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது. இதில் காஸ்ண்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார்.

Vishal and Sunaina doing parents role in Laththi

இப்படம் குறித்து படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படும்போது,  “ரியாலிட்டி.. சர்ப்ரைஸ் நிறைந்த கான்ஸ்டபிள் வாழ்க்கை தான். நம் மாநிலத்தில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. அவர்களை நிர்வாகிக்கிற அதிகாரிகள் மிகவும் குறைவுதான். நடப்பு நிலைமையைச் சமாளிக்கிறது கான்ஸ்டபிள்ஸ் பொறுப்புதான்னு சொன்னார். அவங்ககிட்டே இருக்கிற எளிமையான ஆயுதம் ‘லத்தி’ தான். அதனோடு வால்யூ பத்தியும் படம் பேசும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Vishal and Sunaina doing parents role in Laththi

அத்துடன் இந்த திரைப்படத்தில் முதல் தடவையாக, கல்யாணம் ஆகிய ஒருவராகவும், குறிப்பாக ஏழு வயது பையனுக்குத் தந்தையாக நடிக்கிறார். விஷாலுக்கு மனைவியாக சுனைனா நடிக்கிறார்.

Also Read | மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்.. வெளியான த்ரிஷாவின் கேரக்டர் லுக் போஸ்டர்!

Tags : Vishal, Laththi

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vishal and Sunaina doing parents role in Laththi

People looking for online information on Laththi, Vishal will find this news story useful.