விஷால் - மிஷ்கின் கூட்டணியில் 'துப்பறிவாளன் 2' படத்தின் முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் - மிஷ்கின் கூட்டணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'துப்பறிவாளன்'. விஷால் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார்.

Vishal and Mysskin's Thupparivaalan 2 Shooting Update

இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்த படத்தில் விஷாலுடன் புதுமுகம் ஆஷ்யா ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். மேலும் பிரசன்னா, நாசர், ரஹ்மான், கவுதமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (04.11.2019) முதல் லண்டனில் துவங்கப்படவிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Vishal and Mysskin's Thupparivaalan 2 Shooting Update

People looking for online information on Ilaiyaraaja, Mysskin, Thupparivaalan 2, Vishal will find this news story useful.