நடிகர் விஷால் தனது திருமணம் எப்போது என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷால் தனது திருமணம் எப்போது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் விஷால் இருக்கிறார். இந்த நிலையில், விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பை மட்டும் விஷால் அறிவிக்கவில்லை.
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருந்தார். அதன்படி, கட்டிடம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், விஷால் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், எங்கு நடைபெறும், வரவேற்பு நிகழ்ச்சி எப்போது போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் அறிவித்தபடி, நடிகர் சங்க கட்டிடத்தில் என்றால், அங்கு நடக்கும் முதல் திருமணம் விஷாலின் திருமணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.