ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | ஹவுஸ்மேட்ஸ் எல்லாரையும் பத்தி ADK -வின் RAP பாடல்.. அசந்துபோன போட்டியாளர்கள்..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ் மற்றும் குயின்சி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, வீட்டுக்குள் விக்ரமன் மற்றும் ADK இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விக்ரமன்,"எதையுமே எதிர்பார்க்காதீங்க. உங்க விருப்பப்படி இருங்க. சர்ப்ரைஸ் நடக்கும். எதுக்கும் டிப்ரெஸ் ஆகணும்னு அவசியமே இல்ல. இங்க இருந்து நீங்க வெளியே போனா ஒருவாரம் ஒருமாதிரி இருக்கும். ஒரு 2,3 பேருக்கு விளக்கம் சொல்லுவீங்க. அதுவும் உங்க நெருங்கிய நட்பு வட்டாரத்துல யாராவது இதுபத்தி கேட்டா அவங்ககிட்ட விளக்கம் கொடுக்கப்போறீங்க. அவ்வளவு தான். அதுக்குமேல அத பத்தி யோசிக்க ஒண்ணுமே இல்ல. ஜாலியா இருங்க. பிக்பாஸ்-க்கு பின் உங்க வாழ்க்கை நல்லாவே இருக்கும்" என்கிறார்.
தொடர்ந்து அசல் பற்றி பேசிய விக்ரமன்,"நேத்து அசல் வந்து உங்ககிட்ட அப்படி பேசுனாரு. இப்போ நார்மலா பேசுறாரு இல்ல" என சொல்ல "ஆமா, சாரி சொன்னாரு" என்கிறார் ADK. அப்போது விக்ரமன்,"அவ்வளவுதான். அவருக்கே தெரிஞ்சிருக்கு. அவரே இப்போ நார்மலா பேச ஆரம்பிச்சிட்டாரு" என்கிறார் விக்ரமன்.
Also Read | அறுவை சிகிச்சையா.? சீரியல் நடிகை ஆல்யா மானசாவுக்கு என்ன ஆச்சு? பரபரப்பு Post!!