சமீபத்தில் வைரலான மாற்றுத் திறனாளி விஜய் ரசிகர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
Also Read | "ஒரு படமே எடுத்தேன்".. சீட்டாட்டம் & ஆன்லைன் ரம்மி குறித்து நடிகர் ராஜ்கிரண் பதிவு!
கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.
Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.
இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் விஜய், தனது ரசிகர்களை பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது.
முதல்கட்ட சந்திப்பில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் (ரசிகர்கள்) விஜய்யை சந்தித்து புகைப்படங்கள் எடுத்தனர். சில நாட்களுக்கு முன் நடந்த அடுத்த கட்ட சந்திப்பில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் நடிகர் விஜய், ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கி வைத்துக் கொண்டு நின்ற புகைப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த புகைப்படங்கள் வெளியாகின. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்நிலையில் அந்த ரசிகரின் குடும்பம் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நாலு ஆடு வச்சு பொழப்பு ஓடுது. இவர் மரம் வெட்ட போவார். அந்த மனுசன் என் புள்ளைய தூக்கி வச்சு பாராட்டுனாரே அதுவே போதும். நாங்க இருக்குற வரை இவனை நாங்க பாத்துக்குவோம்." என நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளனர்.
Also Read | சன்னி லியோன் உடன் G.P. முத்துவும் நடித்த Oh My Ghost.. ரிலீஸ் எப்போ? செம்ம அப்டேட்