தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நடுவே கவனம் பெற்று வரும் முக்கிய விவாத மேடை நீயா நானா.
Also Read | "என் பையன் இறந்த மாதிரி இருக்கு..ஒண்ணுமே ஓடல'ங்க.." மீனா கணவர் மறைவால் கலங்கும் ஊர் மக்கள்
நவீன விஷயங்களை எடுத்துக்கொண்டு பேசுபொருளாக்கி விவாதிக்கும் நீயா நானா, தமிழ்ச்சூழலில் ஆகச்சிறந்த முற்போக்கு விவாதக் களங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வார வாரம் ஆரவாரம் என்பது போல, ஒவ்வொரு வாரமும் நீயா நானாவில் டிஸ்கஸ் செய்யப்படும் தலைப்புகள், அந்த வாரத்தில் ட்ரெண்டு ஆகி விடுவது வழக்கம். அதுமட்டுமின்றி பல வருடங்கள் கழித்தும் நீயா நானாவில் பேசப்படும் ஒவ்வொரு தலைப்பும், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும்.
தினசரி, சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுடைய சிந்தனைகளை நேரடியாக பகிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும் ஒரு களமான நீயா நானா, விவாத மேடை புதிய புதிய பார்வைகளையும் கோணங்களையும் வெளிக்கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கிறது. சரி, இவ்வளவு பில்டப்பும் இப்போது வெளிவந்திருக்கிற ஒரு கேரட் சட்னி சிந்தனைக்கு தான் என்றால் நம்ப முடிகிறதா.?
ஆம், அண்மையில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் சைவ சமையலை விரும்பி சாப்பிடும் கணவர் VS அசைவத்தை விரும்பும் மனைவி என்கிற தலைப்பில் கணவன் & மனைவிமார்களுக்கு இடையேயிலான விவாதம் நடைபெற்றது. இதில் கணவர் ஒருவர் தம்முடைய மனைவியிடம் தாம் எப்போதும் விரும்பி சாப்பிடும் கேரட் சட்னியை மீண்டும் கேட்கிறார். அதை இப்போது மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டு கோபியிடம் புகார் செய்கிறார். இதைக்கேட்டதும் உடனடியாக கோபிநாத், “கேரட்டில் ஜூஸ் பார்த்திருக்கிறேன்.. சட்னியா .?” என்று ஆச்சர்யமாகி, அந்த பெண்ணை அழைத்து, “கேரட் சட்னி எப்படி செய்வது .? சமைக்கும் முறை என்ன..?” என்று கேட்கிறார்.
அதற்கு அந்த பெண்ணும், “கேரட்டை கட் பண்ணி, அதில் வெங்காயம் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பின்னர் தாளித்து பரிமாறினால், அது கேரட் சட்னி..” என்று சொல்ல, இதைக் கேட்ட, நீயா நானா கோபிநாத், “இது நீங்களாகவே செய்தது போலிருக்கிறது!” என்று சொல்லிவிட்டு, அந்த பெண்ணின் கணவரிடம், “இதை நீங்கள் மிஸ் பண்ணுவதில் தவறே இல்லை.. ஏதோ அன்று பர்த்டே மனநிலையில் சாப்பிட்டு விட்டீர்கள்..” என்று சொல்லி சிரிக்கிறார். மேலும் அந்த பெண்ணுக்கு அதே முறையில் கேரட் சட்னி செய்து உடனடியாக தரச் சொல்லி ப்ரொடக்ஷனிடம் கோபி சொல்கிறார். எது எப்படியோ இதனை பார்த்துவிட்டு நிறைய பேர் கேரட் சட்னியை முயற்சிக்க போவதாக இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
'சர்தார்' படத்துல Bigg Boss வின்னரா ? - அவரே தன் ஸ்டைலில் சொன்ன விளக்கம்.!