தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.
இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்பட்டிருந்தது. இதன் பெயரில் ஒரு சில குழப்பங்களும், சண்டைகளும் கூட அரங்கேறி இருந்தது.
இப்படியாக கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில் கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் உரையாடி இருந்தார். இதற்கடுத்து ADK-வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி DD பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை புரிந்திருந்தார்.
அவர் அனைத்து போட்டியாளர்கள் குறித்து உரையாடி இருந்த விஷயங்கள் பெரிய அளவில் பிக் பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பொங்கல் படைக்கவும் செய்தனர். அப்போதும் நிறைய கலகலப்பான சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. அந்த சமயத்தில், சமையல் பற்றி பெரிய அளவில் தெரியாமல் ராம் வலம் வந்தபடி இருந்ததாக தெரிகிறது.
அப்போது சமையல் குறித்து பேசும் ராம், "எனக்கு ஒண்ணுமே தெரியாது. அடுப்பை கூட பத்த வைக்க தெரியாது" என்கிறார். அப்போது பேசும் விக்ரமன், "அப்படி இருக்கக் கூடாது ராமா. உன் அம்மா, மனைவிக்கு உதவி செய்ய நீ கத்துக்கணும்" என கூறியதும் நிச்சயமாக என்றும் ராம் குறிப்பிடுகிறார். மேலும், "பிக் பாஸ் வந்து காய்கறி வெட்ட கத்துக்கிட்டேன். வீடு எல்லாம் சுத்தம் பண்ண கத்துக்கிட்டேன்" என்றும் ராம் தெரிவிக்கிறார்.
இதற்கடுத்து சாப்பாடு வைக்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கற்றுக் கொண்டதையும் விக்ரமன் தெரிவித்தார். அந்த சமயத்தில் பேசும் DD, "எங்க வீட்டுல ஆம்பள பசங்க எல்லாருமே சமைப்பாங்க. நான் மட்டும் தான் சமைக்க மாட்டேன்" என குறிப்பிட்டதும், "போதும் பெண்கள் சமைச்சது போதும்" என விக்ரமன் ஆதரவாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, இறுதியில் பேசும் DD , "கரெக்ட்டு, கொஞ்ச நாள் சமைச்சு போடுங்க, சாப்பிட்டு போறோம்" என்றும் கூறுகிறார்.