முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் சென்றிருந்தது.
Images are subject to © copyright to their respective owners
மக்களையும் வெகுவாக கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய 21 போட்டியாளர்களும் ஏராளமானவர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தனர். சண்டை, கலகலப்பு, வாக்குவாதங்கள் என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். இறுதியில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
இதில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே தொடர்ந்து சமூக பிரச்சனைகள் குறித்து நிறைய முறை பேசி இருந்தார் விக்ரமன். தொடர்ந்து, பல பிரச்சனைகள் பற்றிய கருத்தை பேசி ஒரு விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் அவர் உருவாக்கி இருந்தார். அப்படி இருக்கையில், தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
அப்போது தூய்மை பணியாளர்கள் விக்ரமனுடன் மேடையில் தோன்றி இருந்தனர். முன்னதாக பேசிய விக்ரமன், "எனக்கு மேலானவனும் யாரும் கிடையாது. எனக்கு கீழானவனும் யாரும் கிடையாது. இது மக்கள் மேடை, இந்த மக்கள் மேடைல மக்கள் பிரச்சனையை பேசவில்லை என்றால் வேறு எங்க பேச முடியும்?. இந்த குரல்கள் ஒலித்தே ஆக வேண்டும்" என கூறினார்.
Images are subject to © copyright to their respective owners
இதனைத் தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் சிலர் நிகழ்ச்சி மேடைக்கு வந்த சூழலில் அவர்களை குறிப்பிட்டு பேசிய விக்ரமன், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடிய அவலம் இனி இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டு பேசுகிறார். இதனிடையே, அங்கே வந்த தூய்மை பணியாளர்கள், தங்களை பற்றி பேசியதற்காக விக்ரமனை பாராட்டியதுடன் பெரிய மாலை ஒன்றை அணிவிக்கின்றனர்.