தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
Also Read | "சத்யராஜ் sir ஸ்டெப் இப்படித்தான்".. கத்துக்கொடுத்த அமுது.. Vibe ஆன விக்ரமன்.!
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது. இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் நாமினேட் செய்து ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதில், ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் உள்ளிட்டோர் அசிமை நாமினேட் செய்து அவர் முகத்தில் நாமினேட்டட் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர்.
இந்நிலையில், விக்ரமன் தான் கதிரவனை நாமினேட் செய்வதாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் சக போட்டியாளர்களிடம் பேசுகையில்,"14 வாரங்களை நாம கணக்கிட்டு பாக்கும்போது இது பெர்சனாலிட்டி டெஸ்ட். நம்ம இருக்கக்கூடிய சூழ்நிலைல நாம எப்படி கருத்தை முன்வைக்கிறோம்னு பாக்கணும். தீதும் நன்றும் பிறர்தர வாரா-ன்னு சொல்லுவாங்க. நம்ம பேசுறதுக்கான விளைவுகளை நாம சந்திச்சு தான் ஆகணும். அப்படி பிரச்சனைகள் வந்துட கூடாதுனு நெனச்சு விளையாடுனா அதுவும் விளையாட்டுத்தான். ஆனால் அதுல உங்களோட பெர்சனாலிட்டி தெரியாது. உங்க கருத்து என்னன்னு வெளியே தெரியாது. அப்போ, உங்க கருத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுது. அப்படி கருத்தை முன்வைக்காம பல இடங்களை அவர் தவிர்த்ததுனால நான் கதிரவனை நாமினேட் செய்யுறேன்" என்கிறார்.
Also Read | "அஜித் சார் காட்டுற அன்பு இருக்கே".. நடிகர் சமுத்திரக்கனி நெகிழ்ச்சி..!