www.garudavega.com
iTechUS

"எந்த மாதிரி மருமகள் எதிர்பார்க்குறீங்க?".. விக்ரமனின் தாயார் சொன்ன நச் பதில்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சுமார் 106 நாட்கள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்திருந்தது. முந்தைய சீசன்களை போல இந்த முறையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

Vikraman mother about her daughter in law expectations

மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், இதிலிருந்து 3 பேர் Finale விற்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதி சுற்றில் இருந்த சூழலில், யார் வெற்றி பெறுவார் என்ற விறுவிறுப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.

இதனையடுத்து, அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்தும் பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில், Behindwoods நடத்திய "மக்களுடன் விக்ரமன்" என்ற நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார். டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது.

தொடர்ந்து, Behindwoods நிகழ்ச்சியில் விக்ரமன் வருகை தந்த போது, அங்கிருந்த பார்வையாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது விக்ரமனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Vikraman mother about her daughter in law expectations

அப்போது பல்வேறு சுவாரஸ்ய கருத்துக்களையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர். இதனிடையே, விக்ரமனின் திருமணம் குறித்த கேள்விகளையும் தொகுப்பாளினி ஷோபனா முன் வைத்திருந்தார். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் விக்ரமனின் பெற்றோர்கள் வந்திருந்த போதும் திருமணம் குறித்த பேச்சு எழுந்திருந்தது. அப்படி இருக்கையில், தற்போதும் நேர்காணலின் போது விக்ரமனின் திருமணம் குறித்த பேச்சு எழுந்தது.

விக்ரமன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த அவரது தாயார், "அத அவருகிட்ட தான் கேக்கணும்" என கூறியதும் அரங்கத்தில் இருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து, எப்படிப்பட்ட மருமகள் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றும் மருமகள் குத்துவிளக்கு போன்றும் இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் சொல்லும் விக்ரமனின் தாயார், "அவரு எப்படி விரும்புறாரோ அதே மாதிரி தான்" என குறிப்பிடுகிறார்.

Vikraman mother about her daughter in law expectations

தனக்கென எந்த விருப்பத்தையும் கூறாமல் மகன் முடிவு தான் எல்லாமே என விக்ரமனின் தாயார் குறிப்பிட்டு பேசியது தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

"எந்த மாதிரி மருமகள் எதிர்பார்க்குறீங்க?".. விக்ரமனின் தாயார் சொன்ன நச் பதில்!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman mother about her daughter in law expectations

People looking for online information on Bigg Boss Tamil 6, Mother, Vikraman will find this news story useful.