www.garudavega.com
iTechUS

என்னப்பா இது விக்ரமனுக்கு வந்த சோதனை.. சைகைல படம் பெயர் சொல்லணும்.. FUN மோடில் போட்டியாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Vikraman mime for Movie Names Task in Biggboss House

Also Read | அமுதுவின் புதிய ஹேர் ஸ்டைல்.. விக்ரமனால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

Vikraman mime for Movie Names Task in Biggboss House

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி மற்றும் மணிகண்ட ராஜேஷ் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

Vikraman mime for Movie Names Task in Biggboss House

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வீட்டுக்குள் புதிய விளையாட்டு ஒன்றினை போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். அதாவது, தன்னிடம் ரகசியமாக சொல்லப்படும் படத்தின் பெயரை சைகை மூலமாக வெளிப்படுத்த வேண்டும். சக போட்டியாளர்கள் அதனை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி ஒரு ஜாலி டாஸ்க்கில் விக்ரமனிடம் படம் பெயரை சொல்கிறார் அசீம். அதனை விக்ரமன் சைகை மூலமாக நடித்துக்காட்டுகிறார்.

Vikraman mime for Movie Names Task in Biggboss House

முதலாவதாக 'நந்தலாலா' படத்தினை அசீம் சொல்லிவிட்டு செல்கிறார். அதனை விக்ரமன் கஷ்டப்பட்டு வெளிப்படுத்த முயற்சிக்க, இறுதியில் போட்டியாளர்கள் அதனை கண்டுபிடித்து விடுகின்றனர். அதன் பின்னர் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தினை அசீம் சொல்கிறார். அப்போது, ஹார்மோனியம் போல விக்ரமன் செய்துகாட்ட, போட்டியாளர்கள் இளையராஜா என்கின்றனர்.

தொடர்ந்து, அவர் இசையமைத்த சமீபத்திய படங்களை சொல்லி இறுதியில் போட்டியாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அப்போது, "எப்படி அந்த படத்தை கண்டுபிடிச்சீங்க?" என ஆச்சர்யமாய் கேட்கிறார் அசீம். அதற்கு இளையராஜா மூலமாக கண்டுபிடித்ததாக கூறுகின்றனர் போட்டியாளர்கள். இப்படி மொத்த வீடும் Fun மோடுக்கு திரும்பியுள்ளது.

Also Read | GP முத்துவின் ட்ரெண்டிங் காஸ்டியூம்.. பார்த்ததும் விக்ரமன் சொன்ன விஷயம்..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman mime for Movie Names Task in Biggboss House

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.