தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
Also Read | "நான் விக்ரமன் -அ வேணும்னே புறக்கணிக்கல".. சர்ச்சையான சம்பவம்.. ADK கொடுத்த விளக்கம்!!
இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.
இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்பட்டிருந்தது. இதன் பெயரில் ஒரு சில குழப்பங்களும், சண்டைகளும் கூட அரங்கேறி இருந்தது.
இப்படியாக கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில் கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் உரையாடி இருந்தார். இதற்கடுத்து ADK-வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பொங்கல் படைக்கவும் செய்தனர். அப்போதும் நிறைய கலகலப்பான சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. அந்த சமயத்தில், சமையல் பற்றி பெரிய அளவில் தெரியாமல் ராம் வலம் வந்தபடி இருந்ததாக தெரிகிறது. அப்போது, விக்ரமன் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் இருக்கும் பானை அருகே சென்ற ராம், "எனக்கு Smoke கொஞ்சம் அலர்ஜி" எனக்கூற, கரண்டியை அவர் கையில் கொடுத்து பானையை கிளறும்படியும் கூறினார் மகேஸ்வரி.
இதனைத் தொடர்ந்து, ஒன்றும் தெரியாத ஆள் போல, பானையில் ராம் கிளற, "பானை உடையாம கிளறணும்" என்றும் விக்ரமன் அறிவுறுத்துகிறார். மேலும் அவர் கிளறுவதை பார்த்து ஷிவின் மற்றும் விக்ரமன் உள்ளிட்டோரும் ஜாலியாக சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எப்படி செய்வது என ராம் கேட்க, "கிண்டக்கூட உனக்கு சொல்லித் தரணுமா?" என விக்ரமன் கேட்கிறார்.
இறுதியில், அவர் பித்தளை மூடி எடுத்து வைப்பதையும் கூட அனைவரும் சற்று ஜாலியாக குறிப்பிட்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
Also Read | "Love பண்றப்போ Easy-ஆ இருக்கும், ஆனா கல்யாணம் பண்ணா".. அசிம் ஆடுற கேம் குறித்து DD!!