ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | "எனக்கு இது வேணாம்".. Task-ல் ADK கொடுத்த விருது.. தூக்கி வீசிய அசிம்!!.. Bigg Boss
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.
மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த TTF டாஸ்க்குகளுக்கு இடையே ஏராளமான விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், Gender குறித்து விக்ரமன் பேசியுள்ள விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது. "அசிம்கிட்ட TTF-ல (Ticket To Finale) அத வெச்சாங்கன்னா என்ன பண்ணுவீங்கன்னு தனாவோ யாரோ கேட்டாங்க" என ஆண் மற்றும் பெண் ஆகியோர் மாறும் Role Swap டாஸ்க் குறித்து ரச்சிதா பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு பதில் சொல்லும் மைனா நந்தினி, TTF டாஸ்க்கில் Role Swap டாஸ்க் இருக்காது என்றும் அது Fun ஆன விஷயம் தான் என்றும் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில், Gender குறித்து பேசும் விக்ரமன், "ஒரு ஆண் வந்து பெண்ணா உடையை மாத்திக்குறது அப்படின்னு ஒரு குறிப்பிட்ட ஆட்கள் பண்றாங்க. ஆனா அத வச்சு நம்ம அவங்கள Fun பண்றோம்னு வச்சுக்கோங்களேன், அது அவங்கள வேதனைப்படுத்தும். Gender-ங்குறது தனி மனிதர் முடிவு செய்வது. ஆணா, பெண்ணா அவங்களோட உறுப்புல கிடையாது, அவங்க முடிவு செய்றது. நடிப்பு என்ற பெயரில் நீங்க Fun பண்ணக்கூடாதுல்ல. நீங்க நடிக்கிறத பாராட்டலாம். ஆனா அத வச்சு ஒரு ஒரு மாதிரி நகைச்சுவை பொருளா மாற்றுவது தவறு" என விக்ரமன் கூறுகிறார்.
Also Read | 'வாரிசு' படத்தின் கலை இயக்குனர் சுனில் திடீர் மரணம்.. துல்கர் சல்மான் இரங்கல்!