தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
Also Read | "குழந்தை அமைப்பு என் வாழ்க்கைல இருக்கானு தெரியல, ஆனா".. தேம்பி அழுத ரச்சிதா..!! என்ன ஆச்சு?
இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார எலிமினேஷனில் ஜனனியும் வெளியேறி இருந்தார். இறுதி போட்டி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.
இதற்கடுத்து மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர்.
பொதுவாக டாஸ்க் என வந்து விட்டால், பிக்பாஸ் வீட்டிற்குள் நிறைய சண்டைகள் உருவாவதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த வாரம் கலகலப்பாகவும், சற்று எமோஷனல் ஆகவும் செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டு தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், நண்பர்கள் குறித்தும் பேசுவது போல டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
அதே போல, தற்போது மற்றொரு நிகழ்வில் தனது வீட்டில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதி அதை அவர்கள் படிப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதில் பல போட்டியாளர்கள் அந்த கடிதத்தை படிக்கும் போது, கண்ணீர் விட்டு கதறவும் செய்கின்றனர். அந்த சமயத்தில் படிக்கும் ஷிவின், "அன்புள்ள அக்கா என் கூட பிறந்த பாவத்திற்கு என்னால் உனக்கு கஷ்டம் மட்டும் தான்" என கூறி அழ, இதனையடுத்து பேசும் ADK, "டியர் அபியான் உன்னை பிரிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. உன்னை நினைக்காத நாளே இல்லை" என வாசித்து அவரும் கண்ணீர் விடுகிறார்.
இது போல ரச்சிதா, அமுதவாணன் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் தங்கள் குடும்பத்தினர் பற்றி பேசியபடியே கண்ணீர் விட்டு கலங்கி கொண்டும் இருக்கின்றனர். இதற்கு மத்தியில், மற்றவர்கள் கதையை கேட்கும் அசிமுக்கும் தாரை தாரையாக கண்ணீர் வருகிறது. அப்படி ஒரு சூழலில் விக்ரமன் செய்த விஷயம் தான் தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
மற்றவர்கள் கதையை கேட்டு அசிம் கண்ணீர் விடும் சமயத்தில் அவர் அருகே இருக்கும் விக்ரமன், அசிமை கட்டியணைத்து அவரை சமாதானம் செய்து தேற்றவும் செய்கிறார். பிக்பாஸ் வீட்டில் அவர்கள் இருவரும் ஒரு சில முறை சண்டை போட்டுக் கொண்டாலும் தற்போது குடும்பத்தினர் குறித்து கடிதம் எழுதும் சமயத்தில், ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளரை தேற்றி அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் விஷயம், பெரிய அளவில் கவனம் பெற்றும் வருகிறது.
Also Read | "நான் பார்த்திருந்தா அப்படி நடந்திருக்காது".. விக்ரமன் சர்ச்சைக்கு ஜனனி விளக்கம்.. Exclusive