ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில் ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் ஷிவின், ஆபீஸ் செல்லும் போது காஃபி எடுத்து செல்வதாகவும் அங்கே உணவுப் பொருட்கள் கொண்டு போக அனுமதி இல்லை என்ற போதிலும் அங்குள்ள மிஷின் காஃபி பிடிக்காததால் தான் மறைத்து வைத்து காஃபியை கொண்டு போவதாகவும் விக்ரமனிடம் தெரிவிக்கிறார்.
அப்போது பேசும் விக்ரமன், "அங்கேயே ரூல்ஸ்ஸை மீறி இருக்கீங்க. அதனால ரூல்ஸ் மீறது அப்படின்றது உங்களுக்கு வழக்கமான ஒரு விஷயம்" என்கிறார். இதன் பின்னர் பேசும் ஷிவின், "ஒரு காபி குடிக்கிறதுல என்ன விக்ரமன் இருக்க போகுது சொல்லுங்க. விதிகள் அப்டிங்குறது நம்ம பண்றது யாரையும் பாதிக்காம இருக்குறது தான். அதுவரைக்கும் எதுவுமே தப்பு கிடையாது. யாரையும் நான் Harm பண்ணாம இருக்குற் வரைக்கும் தப்பே கிடையாது. நியாயங்கள் எதுக்காக வகுக்கப்பட்டது ஒரு ஆளோட செயல்பாடுனால இன்னொருத்தர் பாதிக்கப்படக்கூடாது தான்" என ஷிவின் குறிப்பிடுகிறார்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் விக்ரமன், "நீங்க எப்படியாவது மறைச்சு கொண்டு போய் காஃபி சாப்பிடுறீங்க. அப்படி சாப்பிடத் தெரியாதவங்களுக்கும் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கு. நீங்க Priviliged-ஆ தான் அந்த காஃபி சாப்பிடுவீங்க. மத்தவங்க அந்த மிஷன் காஃபி சாப்பிடுவாங்க. இந்த இரண்டுக்குமே வித்தியாசம் இருக்கு. அந்த வகையில பார்த்தா மிஷின் காஃபி சாப்பிடறவங்க பக்கம் இது அநியாயமா ஆகுது" என்கிறார்.
இது பற்றி தொடர்ந்து விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டும் இருந்தனர்.