www.garudavega.com
iTechUS

SHIVIN : விக்ரமன் & ராம் புகழாரம்! உணர்ச்சிப்பெருக்கில் கதறி அழுத ஷிவின் BIGG BOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

vikraman and Ram speech Shivin emotionally cried bigg boss

Also Read | "விக்ரமன், அசிம் பேசும்போதே இதெல்லாம் சொல்லிருக்கணும்!".. அசல் சொன்னது என்ன? bigg boss 6

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர்.

vikraman and Ram speech Shivin emotionally cried bigg boss

அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

vikraman and Ram speech Shivin emotionally cried bigg boss

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 98 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

vikraman and Ram speech Shivin emotionally cried bigg boss

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் கொடுத்த தியாகம் செய்யும் டாஸ்கையும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் செய்தனர். இந்நிலையில் , “யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?” என கமல் கேட்டபோது, ஷிவின், கண்ணீருடன் ரச்சிதாவிற்கு நன்றி கூறினார்.

vikraman and Ram speech Shivin emotionally cried bigg boss

இதேபோல், ஷிவினை ஒரு புரட்சியாளர் என விக்ரமன் சொன்னபோதும்,  இறுதியாக ஷிவின் எனக்கு சிஸ்டர் மாதிரி என ராம் உருக்கமாக கூற, ஷிவின் உணர்ச்சிப்பெருக்கில் அழுதார்.

Also Read | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்.. ஹவுஸ்மேட்சை நெகிழ வச்ச வீடியோ.. இன்றைய பிக்பாஸில்..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and Ram speech Shivin emotionally cried bigg boss

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Kamal Haasan, Shivin, Sivin will find this news story useful.