தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.
இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.
இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி இருந்தது. அதிலும் விக்ரமன் முட்டை கேட்டதன் பெயரில், மகேஸ்வரி, மணிகண்டா, அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் வாக்குவாதங்கள் அரங்கேறி இருந்தது. கலகலப்பாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சண்டை அதிகம் பரபரப்பையும் உண்டு பண்ணி இருந்தது.
இதற்கு மத்தியில் அமுதவாணன், அசல் கோலார், விக்ரமன், சாந்தி, குயின்சி உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹிந்தி மொழி குறித்த கருத்துக்களும் அங்கே எழுகிறது. அந்த சமயத்தில் பேசும் குயின்சி, "என் வீட்டுல எவ்வளவோ க்ளாஸ் போறேன்னு சொல்லியும் வீட்டுல விடல. என் பாட்டி ஹிந்தி க்ளாஸ் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க" என கூறினார்.
அப்போது பேசும் விக்ரமன், "சூப்பர்மா. தமிழ் பொண்ணுக்கு எதுக்கு ஹிந்தி?" என தெரிவித்ததுமே, "அப்படித்தான் என் பாட்டியும் சொன்னாங்க" என குயின்சி தெரிவித்தார். தொடர்ந்து பேசும் விக்ரமன், "நான் சும்மா சொன்னேன். எந்த மொழி வேணாலும் கத்துக்கலாம்" என்றும் கூறினார். இறுதியில், நிறைய மொழிகள் கற்றுக் கொள்ள விரும்பியதாகவும், ஆனால் பாட்டி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் குயின்சி.தெரிவித்தார்.