தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியிருந்ததையடுத்து அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
Image Credit : Vijay Television
தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுகள் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த விக்ரமனும், தனக்கு கிடைத்த மக்கள் ஆதரவால் மனம் நெகிழ்ந்து போனதாகவும் வீடியோக்களில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது Behindwoods சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார். இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், பலரும் விக்ரமனை வாழ்த்தி வரவேற்றிருந்தனர். அது மட்டுமில்லாமல், மாலை போட்டு பொன்னாடையை தலையில் கட்டி திருஷ்டி சுற்றவும் செய்திருந்தனர்.
இதில் தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து பேசி இருந்த விக்ரமன், "எல்லாரும் அந்த கேம் ஷோங்குற பேர்ல அத ரொம்ப சுருக்குறாங்க. அது கேம் ஷோ கிடையாது, ஒரு ரியாலிட்டி ஷோ. அந்த வீட்டுல 106 நாள் வெவ்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய 21 பேர், அந்த வீட்டுக்குள்ள போய் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில வாழ்ந்து காட்டக்கூடிய ஒரு ஷோ. அதுல மக்களுக்கு யாருடைய நடத்தை பிடிச்சிருக்கு, யாரோட வாழ்க்கை முறை புடிச்சிருக்கு, யாரு பேசுறது புடிச்சிருக்கு, இதெல்லாம் வச்சு வாக்களிச்சு மக்கள் வந்து ஒவ்வொரு வாரமும் Save பண்ணி கொண்டு போனாங்க.
நான் பேசிய விஷயங்களுக்கும், நான் அங்கு வாழ்ந்து காட்டிய முறைக்கும் வரக்கூடிய அன்பும் ஆதரவுமா தான் நான் பார்க்கிறேன். விக்ரமன் அப்படிங்குற மனிதனுடைய தனிப்பட்ட வெற்றியாக இது இல்ல. நான் பேசிய சித்தாந்தம், கொள்கை, நடந்து கொண்ட முறை இது எல்லாத்துக்கும் கிடைத்த வெற்றியா தான் நான் பார்க்கிறேன்" என கூறினார்.
அதேபோல விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் மிக பொறுமையாக இருந்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "வாடா போடான்னு பேசுறது, ஒருமையில பேசுறது அப்படிங்குறது, என்னை எந்த வகையிலுமே பாதிக்காது. அவர் விளம்பரத்துக்காக பண்றாரு, ஏதோ வெளிச்சத்துக்காக பண்றாரு அப்படின்னு தான் தோணுச்சு. அவர் எந்த சூழலில் இருந்து வர்றார் அப்படிங்குறத பொறுத்து இருக்கு. அது அவருடைய தனிப்பட்ட தகுதியை காட்டுது.
என்னுடைய ஸ்டாண்டர்ட் என்னன்னா நான் எப்படி அதை எதிர்கொள்கிறேன் என்பது. கொள்கை எதிரியை கூட அவர்களுக்கு கூட ஒரு கண்ணியம் உண்டு, அவருக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்குன்னு ஆழமா நம்புறேன். எவ்வளவுதான் என்னோட விவாதம் பண்ணாலும், உங்களுக்கு இருக்கிற Dignity க்கு எந்தவித பிரச்சனையும் வராமல் நான் பார்த்துப்பேன்" என கூறினார்.