தமிழில் சுமார் 106 நாட்கள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்திருந்தது. முந்தைய சீசன்களை போல இந்த முறையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், இதிலிருந்து 3 பேர் Finale விற்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதி சுற்றில் இருந்த சூழலில், யார் வெற்றி பெறுவார் என்ற விறுவிறுப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.
இதனையடுத்து, அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்தும் பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில், Behindwoods நடத்திய "மக்களுடன் விக்ரமன்" என்ற நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார். டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது.
தொடர்ந்து, Behindwoods நிகழ்ச்சியில் விக்ரமன் வருகை தந்த போது, அங்கிருந்த பார்வையாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது விக்ரமனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பல்வேறு சுவாரஸ்ய கருத்துக்களையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர். அந்த சமயத்தில் விக்ரமனின் தாயாரிடம் எப்படிப்பட்ட மருமகள் வேண்டும் என்பது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அந்த சமயத்தில், குத்துவிளக்கு போன்ற மருமகள் வேண்டுமா என்றும் கேட்கப்பட, இதற்கு அவர் பதிலளித்த பின் விக்ரமன் இது பற்றி பேசி இருந்தார்.
"அது என்ன பொண்ணுங்கள குத்துவிளக்குன்னு சொல்றது. பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்கணும்ன்னு கூறுறது தான் பூமர் தனம். கல்யாணம்ங்குறது எதுக்கு பண்றோம்ன்னா Mutual ஆ நம்ம Travel பண்றதுக்கு தான். நமக்கு ஒரு நல்ல புரிதலோட தனிமைங்குற Depression நம்மள வாட்டிடக்கூடாது அப்படிங்குறதுக்கும். அது இணையர் தான், துணைவர் கூட கிடையாது. அது துணைவி, மனைவி கூட இல்ல. இணையர், இணைந்து நம்ம பயணிக்குறது. அதைத்தான் கல்யாணமா நான் பாக்குறேன். சரியானதும் கூட. விளக்கு ஏத்துறதுக்கு ஒரு பொண்ணுங்குறது கூட தப்பான விஷயம் தான்" என்றார்.
தொடர்ந்து, தனக்கு வரப்போகும் மனைவி குறித்து பேசிய விக்ரமன், "Bold ஆ இருக்கணும். பலமா தங்களோட ஐடியாவ முன் வைக்குறவங்களா இருக்கணும். Independent ஆ இருக்கணும்" என தெரிவித்தார்.