தமிழில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆறாவது சீசன் சமீபத்தில் நடைபெற்றிருந்தது.
Image Credit : vijay television
Also Read | GP முத்துவுக்கு "ரஞ்சிதமே" பாட்டு சொல்லிக் கொடுத்த அமுது.. கடைசில ஒரு லைன் பாடுனாரு பாருங்க 😅!!
சுமார் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், சவாலான டாஸ்க் என மொத்தமும் இந்த பிக் பாஸ் சீசன் விறுவிறுப்பு நிறைந்த வண்ணம் தான் இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவில் அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் முன்னேறி இருந்தனர். இதில் அசிம் டைட்டில் வின்னராகவும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நிறைய நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் பரவலாகவும் இருந்து வருகிறது.
Image Credit : vijay television
இந்த நிலையில், Behindwoods நடத்திய "மக்களுடன் விக்ரமன்" என்ற நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். அப்போது அவரது பெற்றோரும் கலந்து கொண்டு மகன் விக்ரமன் குறித்து பேசி இருந்தனர். மேலும், வீடியோ கால் மூலம் பேசிய அவர் தங்கையும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதே போல, பிக் பாஸ் வீட்டில் விக்ரமனின் நெருங்கிய நண்பராக இருந்த ADK -வும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் பீஃப் பிரியாணி வேண்டுமென கடைசி வாரத்தின் போது விக்ரமன் கேட்டிருந்தார். தொடர்ந்து அவர் விருப்பப்படி பீஃப் பிரியாணி வந்திருந்தது. அதை சாப்பிட்ட பின்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் வலம் வந்ததாக சக ஹவுஸ்மேட்ஸ் கூட கூறி இருந்தனர். இதற்கு மத்தியில், பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் பீஃப் பிரியாணி சாப்பிட்டது குறித்து நிறைய கருத்துக்களும் பரவலாக இருந்து வந்தது.
இந்த நிலையில், பீஃப் பிரியாணி பற்றிய பேச்சு உருவானதற்கு விக்ரமன் சில விளக்கங்களை கொடுத்துள்ளார். "மாட்டுக்கறி பிரியாணி நான் கேட்டது பெரிய விஷயம் அப்படின்னு சொன்னாங்க. இப்படி உணவு சாய்ஸ் வந்து பெரிய விஷயம் அப்படின்னு பேசக்கூடிய இடத்துல நம்ம நின்னுட்டு இருக்கோம்ங்குறது வேதனையான விஷயம். ஏன்னா உணவு என்பது தனி மனிதனுடைய சாய்ஸ். எதை சாப்பிடணும் என்பதை நான் தான் முடிவு பண்ணனும். அது சாப்பிடக்கூடாதுன்னு சொல்றதுக்கு இன்னொருத்தருக்கு என்ன உரிமை இருக்கு?. இது என்னுடைய ஃப்ரீடம் ஆப் ரைட்ஸ்ல வருது.
நான் சாப்பிடுறது, என்ன உடை உடுத்தணும்ங்குறது, நான் யார் கூட பேசணும், பேசக்கூடாதுன்றது, நான் யாரை திருமணம் செஞ்சுக்கணும் அப்படிங்குறதுல இருந்து எல்லா எல்லாமே Individual ரைட்ஸ் சம்பந்தப்பட்டது. இத நான் அங்க வந்து பண்ணி இருக்கேன்னா ஏதோ வலுக்கட்டாயமா அந்த அரசியல் திணிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அது ரொம்ப ஆர்கனிக்கா நிகழ்ந்தது, அது இங்க பெரிய அளவுல பேசப்பட்டுருக்கு. அது எனக்கு பெரிய மகிழ்ச்சி" என தெரிவித்தார்.
Also Read | விக்ரமன் ஜெயிக்கணும்ன்னு சொன்னேன், Cup மட்டும் வெற்றியை தீர்மானிக்காது".. ADK ஷேரிங்ஸ்!!