தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.
Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த ஷாருக்கான்.. இஹ்ராம் அணிந்து பிரார்த்தனை! வைரல் போட்டோஸ்
இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர்.
இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.
இந்த டாஸ்க்கிற்கு மத்தியில், அசீம் இரவு நேரத்தில் பூக்களை திருடி இருந்த விஷயம், ஏலியன் அணியில் இருந்தவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருந்தது. பழங்குடி இன அணியில் இருந்து யாரும் பூக்களை இரவு நேரத்தில் எடுக்க மாட்டோம் என கூறியதால் தான் தனியாக போய் தூங்கியதாகவும் ஆனால் இப்படி நடந்து போய் விட்டது என்றும் ஆதங்கத்துடன் மணிகண்டா, குயின்சி உள்ளிட்டோர் கூறி இருந்தனர்.
மேலும், அசீம் இப்படி செய்ததற்காக அவரிடமே மணிகண்டா முறையிட்டிருந்தார். இது ஒருபுறம் இருக்க, அமுதவாணனை அடிப்பதற்காக அவர் உடலில் அசீம் கை வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. முன்னதாக, பழங்குடி அணியில் இருப்பவர்கள் கூட அசீம் தனியாக எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தது, அணிக்குள்ளேயே சண்டையை உண்டு பண்ணி இருந்தது. இதற்கிடையே, மயக்கம் போட்டும் கீழே விழுந்திருந்தார் அசீம்.
அப்போது தன்னை வெளியே அனுப்புமாறும் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்திருந்தார் அசீம். இப்படி இந்த வாரம் முழுக்க அசீம் குறித்த விவகாரங்கள் தான் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது. அப்படி ஒரு சூழலில், பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் டாஸ்க் முடிந்த பிறகு அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் அசீம் குறித்து பேசுகிறார் விக்ரமன்.
அமுதவாணனுடன் சண்டை போட்டது உட்பட இந்த டாஸ்க்கில் அசீம் செயல்பாடு பற்றி பேசிய விக்ரமன், "பேசிட்டு இருக்கும் போது கை வெச்சது ரொம்ப தப்பு. அவரு வந்து Lime Light ல இருக்கணும். கவனத்தை பெறணும்ங்குறதுக்காக மட்டுமே இத பண்றார். வாராவாரம் பண்றார்" என தெரிவிக்கிறார்.
அதே போல, அனைவரின் முன்னிலையில் பேசும் அசீம், "நீங்க (விக்ரமன்) என்ன Lime Light க்காக பேசுறதா சொல்றீங்க. உண்மையில, ஒரு பலமான போட்டியாளரை பத்தி பேச நமக்கு அதுக்கான Lime light கிடைக்குமான்னு நீங்க பேசுறப்போ, நான் பலமான போட்டியாளர்ன்னு என்ன நானே நெனச்சுக்குறேன்" என தெரிவிக்கிறார்.
இதற்கிடையே, தன்னை பலம் வாய்ந்த போட்டியாளராக கருதுவதாக அசீம் பேசியது பற்றி விளக்கும் விக்ரமன், "நீங்க ஆல்ரெடி அட்டக்கத்தின்னு நான் உங்கள குடுத்துட்டேன். நீங்கள் எனது வலிமையான போட்டியாளர் கிடையாது" என உறுதியாக தெரிவிக்கிறார்.
Also Read | "வச்சு செஞ்சிட்டே, உன்ன நம்பவே மாட்டேன்".. அசீம் பண்ண காரியத்தால் வெறுப்பில் மணிகண்டன்!!