'தங்கலான்' படத்தின் புதிய மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தங்கலான் படத்தின் சிறப்பு உருவாக்க வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. வித்தியாசமான தோற்றத்தில் அதிரடியான காட்சிகளுடன் இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும் இயக்குனர் ரஞ்சித் இந்த வீடியோவில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Happy birthday to my #Thangalaan, @chiyaan sir 😊
Presenting you a slice of flesh, a grand making visual video of Thangalaan as our humble tribute to Chiyaan.https://t.co/0cxHldw8Nc#HBDChiyaanVikram #ThangalaanMaking @chiyaan @kegvraja @StudioGreen2 @officialneelam pic.twitter.com/1CHLM4W3fT
— pa.ranjith (@beemji) April 17, 2023