www.garudavega.com

'தங்கலான்' படப்பிடிப்பில் ஹாலிவுட் நடிகர்.. விக்ரம் எடுத்த கலர்ஃபுல்லான போட்டோஸ்.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்ரம் வெளியிட்டுள்ளார்.

Vikram shared Thangalaan Movie Shooting Spot sun pictures

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அப்பா பற்றி நெகிழ்ச்சி கவிதை.." Bakasuran லயா உருக்கமான பேட்டி .. EXCLUSIVE..!

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார். நடிகர் விக்ரமுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை டேனியல் கால்டகிரோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டேனியல் கால்டகிரோன்,   The Beach, Lara Croft Tomb Raider: The Cradle of Life,   The Pianist ஆகிய  படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கால்டகிரோன்,   The Beach, Lara Croft Tomb Raider: The Cradle of Life,   The Pianist ஆகிய  படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Vikram shared Thangalaan Movie Shooting Spot sun pictures

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் தான் எடுத்த சூரிய உதயம் & அஸ்தமன புகைப்படங்களை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Also Read | "மைனஸ் 12 டிகிரி குளிரில் ஷூட்டிங்".. 'LEO' படம் குறித்து மிஷ்கின் வெளியிட்ட வைரல் அறிக்கை!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram shared Thangalaan Movie Shooting Spot sun pictures

People looking for online information on Thangalaan, Thangalaan Movie Shooting Spot, Vikram will find this news story useful.