அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | Lakshmi Vasudevan : “அந்த ஃபோட்டோஸ் என் Whatsapp -ல அத்தன பேருக்கும் அனுப்பி”.. சீரியல் நடிகை உருக்கம்.!
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்பட ப்ரொமோஷனுக்காக பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் மும்பை சென்ற நடிகர் விக்ரம், “இத்தாலி நாட்டில் இருக்கும் பைசா நகர் சாய்ந்த கோபுரத்தை நாம் பார்த்து ஆச்சரியப்படுகிறோம், பாராட்டுகிறோம். ஆனால் உண்மையில் அது சாய்ந்து கொண்டே வருகிறது என்கிறார்கள். அந்த பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை பார்த்து நாம் பூரிப்படைகிறோம். அதன் அருகில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இன்று நம்மிடம் இருக்கும் கோயில்கள் எல்லாம் சிமெண்ட் கொண்டு கட்டப்படவில்லை.
அவை இன்று வரை நேராக நின்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக தஞ்சை கோபுரத்தில் இருக்கும் கல்லை பற்றி உங்களுக்கே நன்றாக தெரியும், முதலில் 6 கிலோமீட்டர் சரிவு பாதையை உருவாக்கி இருக்கிறார்கள். பிறகு காளைகள், யானைகள், மனிதர்களின் உதவியோடு அந்த கல்லை உச்சிக்கு கொண்டு சென்று இருக்கின்றனர். இப்படி எந்த ஒரு சிமெண்டையும் கொண்டு கட்டப்படாத அந்த கட்டிடம் 6 நிலநடுக்கங்களை சந்தித்து இருக்கிறது.
உங்களுக்கு தெரியுமா என்ன நடந்தது என்று? சுற்றளவில், 6 அடி அளவில் தாழ்வாரம் போன்று உருவாக்கினார்கள். மேலே செல்லக்கூடிய வகையிலே மற்றொரு கட்டிட அமைப்பு உருவாக்கியிருப்பதால்தான், இந்த இத்தனை ஆண்டு காலம் அந்த கட்டடம் தாங்கி நிற்கிறது. அதன் பிறகும் கூட, 500 ஆண்டுகள் வரை அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்க முடியவில்லை. யோசித்துப் பாருங்கள். எந்த அளவுக்கு நாம் முன்னோடியாக இருந்திருக்கிறோம், நாம் அதை எல்லாம் நினைத்து பெருமைப்பட வேண்டும். இது வட இந்தியா தென் இந்தியா பற்றியது அல்ல. ஒட்டுமொத்த இந்தியா பற்றியது. நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்” என்று பேசியுள்ளார்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Also Read | Katrina Kaif : தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுடன் கத்ரினா கைஃப் அரபிக் குத்து டான்ஸ்.. வீடியோ