பொன்னியின் செல்வன் படத்தின் புதிய ப்ரோமோ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
Also Read | "இமயமலையில் என் கொடி பறந்தால்".. நடிகர் அஜித்தின் பைக் RIDE.. மாஸ் தெறிக்கும் PHOTOS
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, "பொன்னியின் செல்வன்" படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'சோழா சோழா' பாடலின் புதிய ப்ரோமோ கிளிம்ப்ஸ் வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு விக்ரம் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிருந்தா மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
#CholaChola 🐯 - Anthem for the week! ✨#PS1 🗡️ releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada!#PonniyinSelvan 🗡️ #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/fmFxRDIwf5
— Lyca Productions (@LycaProductions) August 29, 2022
Also Read | ஜெயம் ரவியின் 31வது படம்.. டைட்டிலுடன் வெளியான மோஷன் போஸ்டர்! முழு விவரம்