பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
Also Read | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? செம்ம
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். அண்மையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருந்த கோப்ரா திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களால் மக்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடைசியாக "நட்சத்திரம் நகர்கிறது" என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை பா. ரஞ்சித் இயக்க உள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை "சியான் 61" என குறிப்பிட்டு வரும் நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் பூஜையும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றிருந்தது. இதில், இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளதாகவும், 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் ஞானவேல் ராஜா ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 17) முதல் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | PS1: வெளியான 'சோழா சோழா' பாடல் வீடியோ.. விக்ரமின் தெறி மாஸ் PERFORMANCE!