கோப்ரா, பொன்னியின் செல்வனுக்கு பிறகு விக்ரம் டிக் செய்த ரஜினி இயக்குனர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை இன்னும் முடியாமல் இருக்க, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு தொடர்கதையாகி உள்ள நிலையில், திரைத்துறை  கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பல பெரிய படங்களின் வேலைகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

Vikram next movie with director Karthik Subbaraj

இந்நிலையில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கும் சயின்ஸ் பிக்‌ஷனான கோப்ரா மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு பெரிய படங்களுக்குப் பிறகு, நடிகர் விக்ரம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறார். கார்த்திக் சுப்பராஜ் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்தை முடித்துவிட்ட நிலையில் தன் அடுத்த ஸ்க்ரிப்டை எழுதி முடித்துவிட்டார்.

இந்தக் கதை விக்ரமுக்கு பிடித்துவிடவே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. படத்தில் இன்னொரு முன்னணி ஹீரோவும் இணையவிருக்கிறார். அவர் யார் என்று விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள்.

விக்ரமின் கோப்ரா படத்தைத் தயாரித்து வரும் லலித் குமார்தான் கார்த்திக் சுப்பராஜ் விக்ரம் இணையவிருக்கும் புதுப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறார். லாக்டவுன் முடிந்தபிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும். படத்தின் case & crew உள்ளிட்டஅறிவிப்புக்கள்  அதிகாரபூர்வமான விரைவில் வெளியாகும்.

கோப்ரா படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விக்ரம் பொன்னியின் செல்வன் படத்துக்கு கொடுத்த தேதிகளைத் தவிர்த்து கார்த்திக் சுப்பராஜ் படத்துக்கு கால்ஷீட் தர முடிவு செய்துள்ளார். விக்ரம் ரசிகர்களுக்கும் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கும் லாக்டவுன் காலகட்டத்தில் ஆறுதல் அளிக்கும் செய்தியாக இது இணையத்தில் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram next movie with director Karthik Subbaraj

People looking for online information on Cobra, Karthik Subbaraj, Ponniyin Selvan, Vikram will find this news story useful.