www.garudavega.com

இவர் வந்துட்டாரா? விக்ரம் படப்பிடிப்பில் கமலுடன் இணைந்த முன்னணி நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

vikram movie update famous actor joined with kamalhaasan

படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.

vikram movie update famous actor joined with kamalhaasan

தொடங்கிய நாள் அன்று விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன்  சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. பகத் பாசில் பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் பிறகு படமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

vikram movie update famous actor joined with kamalhaasan

இந்நிலையில் பகத் பாசில் மற்றும் கமல்ஹாசனும் இணைந்து "விக்ரம்" படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டுள்ளனர். பகத் பாசிலும் கமல்ஹாசனும் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

vikram movie update famous actor joined with kamalhaasan

இளம் மலையாள நடிகர்களில் தனக்கு பிடித்த நடிகர் பகத் பாசில் தான் என்று கமல் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் மதன் கதாபாத்திர கமல்ஹாசனின் உடல்மொழியின் தாக்கம், 'பெங்களூர் டேஸ்' படத்தின் தாஸ் கதாபாத்திர பஹத் பாசிலுக்கு அதிகமாகவே இருக்கும்.

vikram movie update famous actor joined with kamalhaasan

இதே போல 'புஷ்பக விமானா', 'ஹே ராம்' மற்றும் 'தசாவதாரம் 'படத்தில் கோவிந்த் கதாபாத்திரத்திலும் கமல்ஹாசன் இதே உடல்மொழியில் நடித்திருப்பார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram movie update famous actor joined with kamalhaasan

People looking for online information on Fahad Fazil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi will find this news story useful.