கமலின் விக்ரம் திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது.
Also Read | “ராஜா கைய வச்சா… அது “… ‘Stranger Things’ meets இசைஞானி… வைரல் வீடியோ
விக்ரம் உருவாக்கம்…
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
வெளியீடு…
தமிழில் விக்ரம் திரைப்படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கில் ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் பென் ஸ்டுடீயோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வெளிநாட்டு உரிமையை ap இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தெலுங்கில் எத்தனை திரைகளில்…
இந்நிலையில் தெலுங்கில் ‘விக்ரம் ஹிட்லிஸ்ட்’ என்ற பெயரில் ரிலீஸாகும் இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிட உள்ளதாக தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி கமல் ரசிகரகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
Also Read | ‘சுவாசமே சுவாசமே தேடல் இன்று… ’ SR பிரபு தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் ‘O2’ first single