விக்ரம் படத்தின் வித்தியாசமான ப்ரமோஷன் ஒன்றை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.
Also Read | மிரட்டலான நடிப்பு… மறக்க முடியாத வேடங்கள்… சலீம் கௌஸ் மரணம்… சோகத்தில் திரையுலகம்!
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில்…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல துறைகளில் முத்திரைப் பதித்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். சினிமா சம்மந்தமாக எந்தவொரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை உடனடியாக தன்னுடைய படங்களில் பயன்படுத்தி தமிழ் சினிமாவை எப்போது முன்னெடுத்து செல்லும் முன்னத்தி ஏராக செயல்பட்டவர். 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் கமல் நடிப்பில் வெளியானது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக அவர் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அவரின் அடுத்த படமாக விக்ரம் உருவாகி வருகிறது.
PAN இந்தியா விக்ரம்
கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக விக்ரம் படத்தின் ஒரு டீசர் வீடியோவை வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தார் லோகேஷ். அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா பாதிப்புகளால் அவ்வப்போது படப்பிடிப்பில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூன்று பிஸியான நடிகர்களை வைத்து மும்முரமாக படப்பிடிப்பை நடத்திவந்தார் லோகேஷ். மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து படத்தின் டீசர் அல்லது டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
வித்தியாசமான ப்ரமோஷன்…
இந்நிலையில் இந்த படத்துக்காக வித்தியாசமாக ஒரு ப்ரமோஷனை படக்குழு மேற்கொண்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் விக்ரம் படத்தின் போஸ்டர் மற்றும் நடிகர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. இது சம்மந்தமான புகைப்படங்கள் முன்பே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்நிலையில் அந்த ரயில் இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் புறப்பட்டுள்ளது. இதை விக்ரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கபாலி திரைப்படத்துக்கு இதுபோல விமானத்தில் படத்தின் போஸ்டரை வரைந்து தாணு விளம்பரப் படுத்தியது வித்தியாசமாக பார்க்கப்பட்டது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8