விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Also Read | ஆம்பர் ஹெர்ட்க்கு எதிரான வழக்கில் வெற்றிபெற்ற ஜானி டெப் உருக்கமான பதிவு..!
கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'விக்ரம்' திரைப்படம், நாளை (03.06.2022) திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ள நிலையில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், விக்ரம் படத்தை தயாரித்துள்ளது.
பேன் இந்தியன்'விக்ரம்'
சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கமலின் திரைப்படம் ரிலீஸ் ஆவதால், ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அது மட்டுமில்லாமல், கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது போக, நடிகர் சூர்யாவும் கவுரவ தோற்றம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும், மொத்தமாக ஐந்து மொழிகளில் விக்ரம் திரைப்படம், பேன் இந்தியன் படமாக வெளியாக உள்ளது.
நடிகர்களின் கதாபாத்திரங்கள்
விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் படு ஜோராக நடந்து வந்த நிலையில், படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனையடுத்து, விக்ரம் படத்தில் யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது பற்றி படக்குழு அறிவிப்பு வெளியிட்டு வந்தது. அதன்படி, பகத் ஃபாசில், அமர் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் விஜய் சேதுபதி, சந்தானம் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக, போஸ்டருடன் அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.
கமலின் கதாபாத்திரம் என்ன?
இதனைத் தொடர்ந்து, விக்ரம் படத்தின் டிரைலரில், ஒரு குழந்தையும் இருப்பதால், விக்ரம் என்பது கமல் பெயரா அல்லது அந்த குழந்தையின் பெயரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உருவானது. அதே போல, சூர்யாவின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வியையும் படக்குழு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன என்பது பற்றி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'விக்ரம்' என்னும் கதாபாத்திரத்தில் கமல் நடிப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல, டிரைலரில் கமல் பேசும் பாத்துக்கலாம் என்ற வார்த்தையும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது .
Also Read | நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்..பின்னணி என்ன?