விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் செகன்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Seven Screen Studios தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இருந்து வெளியான தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிளும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது கோப்ரா படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் செகன்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் விக்ரமின் புதிய தோற்றத்தை கண்ட ரசிகர்களை லைக்ஸ் போட்டு ட்ரெண்ட் அடித்து வருகின்றனர்.
மேலும் இந்த போஸ்டருடன், 'எல்லா ப்ராப்ளத்திற்கும் ஒரு கணக்கு தீர்வு உள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை சீயான் இதில் mathematical expert-ஆக இருப்பாரோ என ரசிகர்கள் கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
"Every Problem Has A Mathematical Solution"
Here it is - #CobraSecondLook 💥💥#CobraXmaSS#Cobra#ChiyaanVikram @AjayGnanamuthu @Lalit_SevenScr @arrahman @IrfanPathan @dhilipaction @theedittable @dop_harish @SrinidhiShetty7 @kabilanchelliah@proyuvraaj @SonyMusicSouth pic.twitter.com/g3ITuy7wGp
— Seven Screen Studio (@7screenstudio) December 25, 2020