விக்ரம் திரைப்படம் அமெரிக்காவில் 3 ஆவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
விக்ரம் ரிலீஸ்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
விக்ரம் வசூல்…
உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விக்ரம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறத். கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசும் போது சூசகமாக 300 கோடி ரூபாய் என பேசியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வசூல் மழை…
இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் விக்ரம் பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. முக்கியமாக அமெரிக்காவில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் விக்ரம் திரைப்படத்தை வெளியிட்ட ப்ரைம் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 14 நாட்களில் 2.6 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாய்) வசூலித்துள்ளதாக அறிவித்துள்ள்து. மேலும் தொடர்ந்து 60 திரையரங்குகளில் 3 ஆவது வாரத்தில் ஓடிக்கொண்டு இருப்பதாக அறிவித்து விரைவில் 3 மில்லியன் டாலர்கள் வசூல் ஈட்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.