"பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டியது ஏன்"... சர்ச்சைக்கு விளக்கம் அளித்த நடிகர் விஜய் சேதுபதி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று ஜனவரி 16 அன்று விஜய் சேதுபதி தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்கள் அவர் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டுவது போன்று ஒரு போட்டோ வைரலானது. அது சிறிய சலசலப்பையும்  ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

vijaysethupathi gives explanation over cake controversy சர்ச்சைக்கு விளக்கம் விஜய் சேதுபதி

அவர் கூறுகையில் "எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.  இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்.

அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

"பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டியது ஏன்"... சர்ச்சைக்கு விளக்கம் அளித்த நடிகர் விஜய் சேதுபதி..! வீடியோ

மற்ற செய்திகள்

Vijaysethupathi gives explanation over cake controversy சர்ச்சைக்கு விளக்கம் விஜய் சேதுபதி

People looking for online information on Vijaysethupathi will find this news story useful.