தளபதி 63-ஐ கைப்பற்றிய பிரபல நிறுவனம் - விவரம் உள்ளே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் திரையரங்க உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay's Thalapathy 63 TN theatrical rights bagged by Screen Scene entertainment

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

ஏ.ஜி.எஸ் எண்டரெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கதிர், யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் சமீபத்தில் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து ‘தளபதி 63’ படத்தின் தமிழக திரையரங்க உரிமத்தை மிகுந்த தொகைக்கு ஸ்கீர்ன் சீன் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிறுவனம் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’, ஹிப்ஹாப் தமிழா நடித்த ‘நட்பே துணை’, பிரபுதேவாவின் ‘தேவி 2’, விஷாலின் ‘அயோக்யா’ உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Vijay's Thalapathy 63 TN theatrical rights bagged by Screen Scene entertainment

People looking for online information on Atlee, Screen scene, Thalapathy 63, Vijay will find this news story useful.