விஜய்யின் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவர் கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார். இவர் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''நண்பர்களே, நான் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இல்லை. அதில் என் பெயரில் இருப்பது போலி அக்கவுன்ட்டுகள். நான் ட்விட்டரில் மட்டுமே இருக்கிறேன். ஜாக்கிரதை'' என அவர் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் என்ற பெயரில் இயங்கி வரும் பல போலி அக்கவுன்ட்டுகள் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை குறித்து தவறான தகவல் கொடுத்து வருவதால் அவர் இப்படி பதிவிட்டுருக்கிறார்.
Guys, I’m not in facebook or instagram I’m active only in @twitter all other accounts are FAKE Beware!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 6, 2020