பிரபல நடிகரின் மனைவி உடலை வில்லாய் வலைத்து கொடுத்த யோகா போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஷாந்தனு. இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் ஆங்கராக அசத்தி வந்த கீர்த்தி என்கிற கிகி விஜய்யை திருமணம் செய்துகொண்டார். கீர்த்தி ஆங்கரிங் மட்டுமின்றி நடனத்தில் ஆர்வம் காட்டி வருபவர் ஆவார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது யோகா புகைப்படங்களை பதிவிட்டார். உடலை வில்லாய் வலைத்து, அவர் பகிர்ந்த புகைப்படங்களை ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. மேலும் 'மனதை விட்டுவிட்டு உடலை ஃப்ரீ செய்யுங்கள்' எனவும் அவர் பதிவிட்டுள்ளார். ஆங்கரிங், நடனம் என கலக்கும் அவரின் யோகா புகைப்படங்கள் ட்விட்டரில் லைக்ஸை குவித்து வருகிறது.
Quit ur mind...Free ur body! ➰ pic.twitter.com/0FDA3udgij
— kiki vijay (@KikiVijay) April 27, 2020