நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி செய்திருப்பதுடன் அதுகுறித்த பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகையாக கலக்கி வந்தவர் விஜயலக்ஷ்மி. இவர் தமிழில் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஃப்ரென்ட்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன், மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி திடுக்கிடும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் BP மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாகவும், இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிட போவதாகவும் கூறி எமோஷனலாக பேசினார். தன்னை ஜாதிய ரீதியாக தாக்குவதை பற்றி தெரிவித்த அவர், மேலும் பல அவதூறுகளை சிலர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து பேசிய அவர், ''எனது அம்மாவுக்காகவும் எனது சகோதரிக்காகவும் மட்டுமே நான் வாழ வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் மீடியாவில் என்னை தொடர்ந்து அசிங்கப்படுத்துவதை பார்க்கும் போது, எனக்கும் போதும் என்ற மனநிலை வந்துவிட்டது. இதுதான் என் கடைசி வீடியோ. நான் இறந்தபிறகு இதற்கு காரணமான சீமான் மற்றும் ஹரி நாடார் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சைகள் அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.