விஜய்யின் பிகில் படம் குறித்து பரவி வந்த செய்தி குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். அட்லி இயக்கிய இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இத்திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.
இதனிடையே பிகில் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியும், தயாரிப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்கள் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து ஏ.ஜி.எஸ் தரப்பில் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள பதிவின் மூலம், அவர் அப்படியான எந்த பேட்டியும் கொடுக்கவில்லை, பிகில் படத்தால் நஷ்டம் என பரவி வரும் தகவல் முற்றிலும் ஒரு பொய்யான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிகில் குறித்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Yes. @republic please fact check this article. Thank you 🙏 https://t.co/BROY0EtSXt
— Archana Kalpathi (@archanakalpathi) May 28, 2020