''விஜய் கூட நடிச்சதுல ஒண்ணு தெரிஞ்சுது..'' - பிகில் வர்ஷா போலம்மா நச்சென்று சொல்கிறார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் குறித்து நடிகை வர்ஷா போலம்மா சூப்பர் பதில் கொடுத்துள்ளார். 

பிகில் விஜய் பற்றி வர்ஷா போலம்மா | vijay's bigil actress varsha bollamma shares about thalapathy

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். அட்லி இயக்கிய இத்திரைப்படத்தில், நயன்தாரா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் ப்ளேயராக நடித்து கலக்கினார் நடிகை வர்ஷா போலம்மா. 

இந்நிலையில் வர்ஷா போலம்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி கேட்ட போது, ''தளபதி கூட நடித்தது என்பது ஒரு கனவு மாதிரி. அவருடன் நடித்த போதுதான் தெரிந்தது, ஏன் அவர் தளபதியாக இருக்கிறார் என்று'' என அவர் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் பிகில் நடித்து கலக்கிய இவர், விஜய் சேதுபதியுடன் 96 படத்திலும் நடித்துள்ளார். 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிகில் விஜய் பற்றி வர்ஷா போலம்மா | vijay's bigil actress varsha bollamma shares about thalapathy

People looking for online information on Bigil Tamil, Thalapathy, Varsha Bollamma, Vijay will find this news story useful.